/ வரலாறு / விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் தகவல்களை உடைய சிறப்பு மலர். இயங்கங்கள், பத்திரிகைகள், கலைஞர்கள் என தனித்தனியாக விபரம் தொகுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட தியாகிகள் படங்களுடன் செய்திகள் உள்ளன. தமிழக போராட்டக் களத்தின் முக்கியத்துவம், அதனால் ஏற்பட்ட விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. விடுதலை இயக்கத்துடன் இணைந்திருந்த இதழ்கள், தடை செய்யப்பட்ட புத்தகங்கள் குறித்த விபரங்களும் உள்ளன.விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அறிஞர்களின் கட்டுரைகள் பல கோணங்களை காட்டுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நுால்.– ஒளி