/ கட்டுரைகள் / விடுதலைக்கு என்ன வழி

₹ 80

பட்டியல் ஜாதி மக்கள் திரண்டிருந்த மாநாட்டில், 1935ல் அம்பேத்கர் ஆற்றிய உரையின் சுருக்கமாக அமைந்துள்ள நுால். மதம் என்பது மனிதனுக்காக; மனிதன் மதத்திற்காக அல்ல என்பதை மையமாக உடையது உரை. பின் தங்கிய மக்கள் வலிமை பெற, விடுதலை பெற, மனித தன்மை வளர, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக விளங்குவதற்கான வழிமுறைகளை அறிவுறுத்துகிறது. தனிமனிதனை உயர்த்துவதற்கான மூன்று காரணிகளை மையமாக கொண்டுள்ளது. அனுதாபம், சமத்துவம், சுதந்திரம் பற்றி சிந்திக்க கற்று தருகிறது. பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க, பொது கிணற்றில் நீர் எடுக்க, கல்யாண மாப்பிள்ளை குதிரை ஊர்வலம் போக உரிமை கோருகிறது. சமத்துவத்தை நிலைநாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன்