/ வாழ்க்கை வரலாறு / விடுதலைக்கு வித்திட்ட வீரத் தியாகிகள்

₹ 40

நாட்டு விடுதலைக்கு வித்திட்ட வீரத் தியாகிகளை பற்றி குறிப்பிடும் நுால்.எதிர்காலத்திற்காகப் பாடுபட்டவர்களின் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது; வலி நிரம்பியது. எத்தனை போராட்டங்கள், உயிர் பலி, நினைத்து பார்க்க முடியாத சித்ரவதை, சுயநலமற்ற வாழ்க்கை என பட்டியலிடுகிறது.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், வ.வே.சு.அய்யர், தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, பூலித்தேவன், ஜான்சிராணி, பகதுார் ஷா என, 29 வீரர்களை பற்றி குறிப்பிட்டு இருக்கிறது.வாசித்து முடிக்கையில் சுதந்திரம் பற்றிய பார்வை நிச்சயம் புரியும். இது துளி தான். ஆனால், ஒளியூட்டும் உணர்ச்சிப் பெருக்குள்ள நுால்.– வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை