/ வாழ்க்கை வரலாறு / விஜயகாந்த் ஒரு சரித்திரம் – சகாப்தம்
விஜயகாந்த் ஒரு சரித்திரம் – சகாப்தம்
நடிகர் விஜயகாந்த் வாழ்க்கையில் முக்கிய தகவல்களை தொகுத்து தரும் நுால், புள்ளி விபரங்களோடு கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. சினிமாவில் வாய்ப்பு தேடி, சென்னை வந்தது, அனுபவித்த கஷ்டம், அவமானங்கள் மனதில் நிற்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. வேறு மொழி படங்களில் நடிக்காமல் தவிர்த்ததை குறிப்பிடுகிறது. நடிகர் சங்க கடன்களை முனைப்போடு செலுத்தியது குறித்த விபரங்கள் உள்ளன. நடிப்பில் எடுத்துக்கொண்ட சிரத்தை, தொழில் பக்தி வியக்க வைக்கிறது. படப்பிடிப்பு தளங்களில் நடந்து கொண்டதை விவரிக்கிறது. ஐந்து ஆண்டுகளாக சந்தித்த உடல்நலப் போராட்டம், நெஞ்சத்தை கனக்க வைக்கிறது. விஜயகாந்த் ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நுால். – டாக்டர் கார்முகிலோன்