/ புத்தக மதிப்புரை / விகடன் தீபாவளி மலர் 2026

₹ 200

வித்தியாசமான சிறுகதைகள், கட்டுரை மற்றும் ஆன்மிக செய்திகளுடன் மலர்ந்துள்ளது, விகடன் தீபாவளி மலர். மலேஷியா கண்ணாடிக்கோவில் குறித்த செய்திகள், சுற்றுலாவை விரும்புவோருக்கு விருந்து. விநாயகர் சிலை சேகரிப்புகள் பற்றிய பேட்டி வித்தியாசமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. நடிகர் ரஜினியுடன் பணியாற்றிய மூன்று தலைமுறை கலைஞர்களின் பேட்டி சினிமாவின் பன்முகத்தை காட்டுகிறது. மறைந்த எழுத்தாளர்கள் தமிழ்வாணன், மஹா ஸ்வேதாதேவி, கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, கவிஞர் கண்ணதாசனை கவுரவிக்கும் சிறப்பு செய்திகளுடன் உள்ளது. தபால்துறை, காந்திஜியை காத்த காவல் அதிகாரிக்கு கிடைத்த பரிசு குறித்த விபரங்கள் நெகிழ்வூட்டுகின்றன. இசை, கலை, இலக்கியம், பயணம், வரலாறு என, வண்ணம் மிக்க செய்திகளுடன் ஜொலிக்கிறது. புதுமை விரும்பிகளான, ‘ஜென் ஸி’ தலைமுறையை திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. – மதி


புதிய வீடியோ