காலந்தோறும் அறம்
மொத்தம் 40 கட்டுரைகள் இந்நூலில் அமைந்திருக்கின்றன. வாழ்வியல் நெறிகளை இக்கட்டுரைகள் படம் பிடிக்கின்றன. பெண் என்ற கட்டுரையில், "தன் ஆளுமையைப் போஷித்து, தன் திறமைகளின் கிரணங்களால் உலகைத் தழுவுகின்றவளாக இருப்பாள் என்றும் "காதல் என்பது ஒருவகைப் பொறுப்பு: சுதந்திரமல்ல என்பதும் இந்த நூலில் காணப்படும் அழகிய பதிவுகள்.இராவணனின் இலங்காபுரியை அழகை இலட்சுமணன் பார்த்து வியப்பதும், அதை ஆள விரும்புவதும், அதற்கு இராமன் தெரிவித்த கருத்தை வால்மீகி வார்த்தைகளில் கூறி, விளக்கமாக பாரதியார் கூறிய "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே என்று சுட்டிக் காட்டியிருப்பதும், ஆழமான சிந்தனைத் தெளிவை பிரதிபலிக்கிறது. காவல் துறையில் உயர் அதிகாரியான ஆசிரியரின் சமுதாயப் பார்வை நலத்தின் சிறப்பிற்கு இவை சில உதாரணங்கள்.நல்ல சிந்தனைகள், நயமான விளக்கம் ஆகியவை இந்த நூலின் அழகாகும்.