/ ஜோதிடம் / விவாக தீபிகா
விவாக தீபிகா
சுபிட்சமான மண வாழ்வு அமைய வழிகாட்டும் நுால். தீபிகா என்பது ஒளி விடும் ஜோதி என்கிறது. ஜாதக தோற்றத்தை அறிய ஒரு அட்டவணை தரப்பட்டுள்ளது. பொருத்தம் பார்ப்போர் இதன் அடிப்படையில் தோஷங்களை அறிந்து கொள்ளலாம். பெண் பார்க்கும் படலம் முதல், ருது சாந்தி முகூர்த்தம் வரை சாஸ்திரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. திருமண உறவை விளக்கி இல்லற சடங்கு விபரத்தை தெரிவிக்கிறது. வரன் பொருத்தம் பார்ப்பதில் வழிகாட்டுகிறது. அதன் வழியாக அறம், பொருள், இன்பம், மோட்சம் பற்றி தெரிவிக்கிறது. திருமண வாழ்வு சிறப்பாக துணை நிற்கும் நுால். – புலவர் ரா.நாராயணன்




