/ கட்டுரைகள் / வியப்பூட்டும் பஞ்சபூதங்களும் உயிரூட்டும் நீர் நிலைகளும்

₹ 150

பஞ்ச பூதங்கள் என போற்றப்படும் நீர், தீ, நிலம், காற்று, ஆகாயம் பற்றி வியப்பூட்டும் தகவல்களை எடுத்துக்கூறும் நுால். நீர் மேலாண்மையில் தமிழகத்தின் சிறப்புகளை முன் வைக்கிறது.முதலில், ‘நீரும் நானும்’ என, குழந்தைப் பருவ அனுபவங்களை கவிதை நடையில் அமைத்து கவனத்தை ஈர்க்கிறது. மழை, பள்ளிப்பருவம், ஆறுகள் பிறப்பு, கங்கை, காவிரி வரலாறு, அருவி உள்ளிட்ட தலைப்புகளில் தொகுத்துள்ளது.தமிழக நீர் மேலாண்மை, ஏரி, குளம், கால்வாய் என விரிவாக அலசியுள்ளது. வழக்கமான உரைநடை போல் இன்றி, சந்தம் கலந்து கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ளது. அரேபிய பாலைவனப் பகுதி நீர் மேலாண்மையையும் விரிவாக தரும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை