/ சுய முன்னேற்றம் / வியர்வையின் வெளிச்சம் வெற்றிவாசலின் திறவுகோல்
வியர்வையின் வெளிச்சம் வெற்றிவாசலின் திறவுகோல்
பக்கம்: 296 வி.ஜி.பி., குழுமத்தைச் சேர்ந்த வி.ஜி.செல்வராஜ் அவர்களின் சுய சரிதை இது. "நீ உன்னை நிரூபித்துக் காட்டு என்ற வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, சிறு வயது முதல் தற்போது வரை எப்படி எல்லாம், ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வாழ்வில் முன்னேறியதை, எளிய நடையில் அழகாக விவரித்துள்ளார். வி.ஜி.பி., குழுமம், இன்று பெரிய அளவில் ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு, இவர் தன் பங்கிற்கு செய்த காரியங்கள், முயற்சிகள் என்னென்ன என்பதும் விவரிக்கப்பட்டுள்ளன.அவர் சாதித்த பல விஷயங்களும் நூலில் அழகுற தெரிவிக்கப்பட்டுள்ளன. வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் புத்தகம் .