/ பயண கட்டுரை / விழாக்களும்! விருதுகளும்!!

₹ 120

தமிழ்ப் பேராசிரியரின் அனுபவங்களையும், விருதுகளையும் பட்டியலிடும் நுால். பயண அனுபவங்களை நண்பருக்கு எழுதும் ஆறு கடிதங்களாகப் பிரித்து தொகுத்து தருகிறது. இதில் காரில் சென்றது, கவிதை வாசித்தது, மேடைப் பேச்சு, ஊர்களின் சிறப்பு என விரிகிறது. வாங்கிய சான்றிதழ்கள் பளிச்சிடுகின்றன. நெடுங்குன்றம், குரங்கணில் முட்டம், சாத்தனுார் பற்றிய விபரங்களை சொல்கிறது. சேலம் சாதனையாளர் விழாவில் விருது பெற சென்ற போது பெற்ற அனுபவத்தை சுவாரசியம் குன்றாமல் எடுத்துரைக்கிறது. சில நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவமும் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அறநெறிக்கல்வி தேவை என வலியுறுத்துகிறது. விருதுகள் பெற்ற அனுபவத்தை கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை