/ பொது / விழிப்புடனும் செழிப்புடனும் வாழ வழி சொல்லும் பொன்மொழிகள்

₹ 70

பலதரப்பட்ட 1,011 பொன்மொழிகளை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். முதல் பொன்மொழி, சினம் இல்லா மனம் நந்தவனம். கோபம் இல்லாத இடத்தில் மகிழ்ச்சியின் பூக்கள் மலரும்.செருப்பு தான் ஒற்றுமையின் புகழைச் சொல்கிறது. இந்தப் பழமொழி அவசியம் மனிதன் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. மூளை உள்ள ஆளை தேடி வரும் நல்ல வேளை என்று சொல்கிறார். ஆனால் மூளை உள்ளவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் என்று சொல்ல முடியாது.சேமிப்பு இல்லாதவன் துயர் படுவான் பூமியில் என்பது போன்ற புதுப்புது அர்த்தங்கள் கற்பிக்கும் பொன்மொழிகள் நிறைந்த நுால்.– சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ