/ வாழ்க்கை வரலாறு / வ.உ.சி. சுயசரிதை
வ.உ.சி. சுயசரிதை
பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 160) 1946ல் வெளிவந்த வ.உ.சி., சுயசரிதையின் மறுபதிப்பு இது. சுயசரிதை என்பதை தற்சரிதை என தூய தமிழில் வ.உ.சிதம்பரனார் குறிப்பிட்டிருப்பது, அவரது தமிழ் உணர்வுக்கு சான்று. இந்நூலின் வாயிலாக வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதுடன், அவர் நடத்திய பத்திரிகை, அவரது கப்பல் கம்பெனி, அவர் அடைந்த துன்பங்கள் முதலானவற்றையும் அறிந்து கொள்ள முடியும். சுயசரிதை என்பது ஒருவரின் வாழ்க்கையை நேர்முகமாக நமக்கு தெரிவிக்கும் இலக்கிய வகை ஆகும். எனவே, இவ்வகை இலக்கியங்களில் நம்பகத்தன்மை மிகுதி எனலாம். சுதந்திரப் போராட்ட வீரர், தமிழறிஞர், வழக்கறிஞர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை நமக்கு நல்ல பாடம். அந்த வாழ்க்கை பாடத்தை இந்நூல் அழகாக எடுத்துரைக்கிறது.