/ இசை / வாட்டர் லில்லீஸ் அண்ட் வார் டிரம்ஸ் (ஆங்கிலம்)
வாட்டர் லில்லீஸ் அண்ட் வார் டிரம்ஸ் (ஆங்கிலம்)
தேர்ந்தெடுத்த சங்கப் பாடல்களின் ஆங்கில மொழியாக்க நுால். அயல்மொழி அறிஞர்கள் சங்கப் பாடல்களை பயில்வதற்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது.எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநுாறு, அகநானுாறு, புறநானுாற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை திணைகளிலிருந்தும் எடுத்திருப்பது சிறப்பு. மென்மையான காதல் உணர்ச்சிகள் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் போர், கொடை, வீரம், மெய்ப்பொருளை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு பொருந்தும் வகையில் படைப்புகள் அமைந்துள்ளன. சுவை குன்றாத நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு