/ ஜோதிடம் / எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் – என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் – என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
ஜாதக ரகசியங்களை தரும் புத்தகம். எந்த பிள்ளையின் தந்தை கோடீஸ்வரன் ஆவான் என்ற குறிப்பு படிக்க துாண்டுகிறது. ஒரு குடும்பத்தில் பல கிழமைகளில் பிறந்தோர் இருப்பர். கிழமையை மட்டுமின்றி ஆதிக்க எண்கள் அமைப்பையும் இணைத்து பலன் சொல்லப்பட்டு உள்ளது. பலருக்கும் இது பொருந்துவது ஜோதிட கணிப்பின் வெற்றியாக குறிப்பிடுகிறது. உதாரணமாக, ஒன்பதாம் எண் ஆதிக்கம் திங்கட்கிழமை பிறந்தவரின் குறிப்புடன் பொருந்துவதாக உள்ளது. நவரத்தின கற்களில் எந்த கிழமை எந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தோர், எதை அணிய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஆரோக்கிய உணவு முறைகளுடன் தொகுக்கப்பட்டுள்ள நுால். – சீத்தலைச் சாத்தன்