/ கட்டுரைகள் / உலக புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்
உலக புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்
உலக அளவில் நாட்டுப்புற இயலை அறிமுகம் செய்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். தொகுப்பில் மூன்று கட்டுரைகள் உள்ளன. நாட்டுப்புறவியல் என்பதன் பொருள் குறித்து தெளிவு ஏற்படும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறவியல் என்ற கருத்தை விளக்கும் வகையில் அறிஞர்களின் எண்ணங்களும், முடிவும் அவற்றில் தொகுத்து தரப்பட்டுள்ளன. நாட்டுப்புறவியலின் வகைகள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. கட்டுரைகள் அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞர்களான ஆலன் டண்டிஸ், மரியா லீச், ஆர்.எஸ். போக்ஸ் ஆகியோரால் எழுதப்பட்டவை. நாட்டுப் புறவியல் கற்போருக்கு உதவும் வகையில் உள்ளன. நாட்டுப்புறவியல் கற்போருக்கு வழிகாட்டும் நுால். – மதி




