/ கவிதைகள் / யாரிடத்திலும் புத்தர் இல்லை

₹ 130

சமூகத்தில் நிலவும் யதார்த்தங்களை வெளிப்படையாக கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்பு எங்கு தேனாக இனிக்கிறதோ, அங்கு வாழ்க்கை மலராக சிரிக்கும் என்று நயத்துடன் தெரிவிக்கிறது. இயல்பான மொழிநடையில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன. ஒரு கவிதையில், ‘எல்லாருக்கும் தேவைப்படுகிறது கவசமணிந்த புன்னகை’ என்று, அகத்தில் மறைந்துள்ள உணர்வுகளை வரிசைப்படுத்துகிறது. அதன் வழியாக மனிதர்களின் செயல்பாட்டில் உள்ள வேற்றுமையை சுட்டிக் காட்டுகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் ஒவ்வாமை, இயலாமை, அறியாமையின் விளைவுகளை வெளிப்படுத்தி, ஏற்றத்தாழ்வு குறைய வழிகாட்டுகிறது. வாசிப்பு பயிற்சியால் மனதில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை