/ கட்டுரைகள் / ஏன் என்று அறிவோமா

₹ 100

குடும்பத்தினருடன் உரையாடுவது போல் கருத்துகளை விளங்க வைக்கும் நுால். மூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. பிறந்தவுடன், 16 நாட்கள் குழந்தை கண்ணீர் சிந்துவதில்லை என்பது போன்ற அரிய செய்திகள் உள்ளன. தோட்டம் வாங்கும் வழிமுறையாக, ‘வாங்க விரும்பும் தோட்டத்தில், முதல் நாள் இரவில் ஒரு சேவலை விட வேண்டும்; விடியும் போது அது கூவினால் வாங்கலாம்’ என ஆலோசனை தருகிறது. ‘பந்திக்கு முந்து படைக்கு பிந்து’ என்ற பழமொழிக்கு புதிய விளக்கமாக, ‘சாப்பிடும் போது கையை முன்னுக்கு கொண்டு வர வேண்டும்; சண்டையில் அம்பு விட கையை பின்னுக்கு தள்ள வேண்டும்’ என விவரிக்கிறது. இதுபோல் சுவை மிக்க விஷயங்கள் கொட்டிக் கிடக்கும் நுால். – சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை