/ கட்டுரைகள் / யு கேன் பிகம் எ கிரேட் டீச்சர் (ஆங்கிலம்)

₹ 175

சிறந்த ஆசிரியராகும் வழிமுறையை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.குழந்தை உளவியல், சிறந்த ஆசிரியராக துடிப்போருக்கு அறிவுரைகள், பள்ளி வகுப்பறைகளில்எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அதற்கான தீர்வுகள் என்று ஒன்பது பகுதிகளாக சொல்லப்பட்டிருக்கிறது.கல்வி தான் மாணவர்களின் உரைகல், பாடத்தைத் தாண்டிச் செல்லும் ஆசிரியர் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதாக, அறிஞர்கள் சுட்டிக்காட்டிய மேற்கோள்களும் இடம் பெற்றிருப்பது கவனிக்க வைக்கிறது. ஒரு ஆசிரியர் கல்வியை எவ்வாறு சிறப்பாக, மகத்துவமாக, சாதனையாக மாற்ற முடியும் என்பதை பதம் பிரித்து காட்டுகிறது. ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால்.– ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ