Advertisement

அடங்காத மனதை ஜெயிப்பது எப்படி?


அடங்காத மனதை ஜெயிப்பது எப்படி?

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசையில் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கூறும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம் 60 தலைப்புகளில் வழி காட்டப்பட்டுள்ளன. துன்பம் வருவது இயற்கை. அதிலிருந்து வெளிவரும் வழிமுறை விளக்கப்பட்டுள்ளது. மனதை கட்டுப்படுத்துவது தான் வெற்றிக்கு முதல்படி என்று விளக்கமளித்து உள்ளது. அமைதியே வாழ்க்கைக்கு அடித்தளம். அதை பெற, மனதைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி எனக் கூறப்பட்டுள்ளது. மனதை கட்டுப்படுத்தி வென்று விட்டாலே துன்பங்கள் வராது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மனதை கட்டுப்படுத்த வேண்டுமெனில், முதலில் அதை அறிய வேண்டும். பின் தானாக கட்டுப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வழிமுறை குறித்தும் பேசப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயர வழிகாட்டும் நுால்.– முகில்குமரன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்