Advertisement

காக்கைச் சிறகினிலே


காக்கைச் சிறகினிலே

₹ 230

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

பறவைகள் பற்றி விரிவான அறிவை தரும் நுால். உயிரினங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. அறிவியல் அணுகுமுறையில் தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன.இந்த நுால், ‘அண்டமும் உயிரும்’ என துவங்குகிறது. உயிரினங்களின் தோற்றம், கண்டங்கள் உருவாதல், பறவைகள் தோன்றிய விதம், டைனோசர் – பறவை இடையேயான ஒற்றுமை என, படிப்படியாக தகவல்களை தந்து அறிமுகம் செய்கிறது. பறவைகளின் இறகு தோற்றம், வண்ணங்கள் உருவாக்கம், பறக்கும் விதம் என அறிவூட்டுகிறது. பறவையின் உடல் செயல்பாடு, உணர்வுகள், ஒலித் தொடர்பு, இடப்பெயர்வு, வழி அறியும் திறன் என விரிகிறது. பறவைகள் வாழ்வியல், இனப்பெருக்கம், முட்டை, கூடுகளின் கதை என முறைப்படுத்தி தகவல்களை தருகிறது.இறுதியில், பறவைகளை நோக்குவதற்கான வழிமுறை மற்றும் ஆராய்ச்சி குறித்த அறிவை புகட்டுகிறது. பறவையியல் பற்றி வெளிவந்துள்ள அறிவு நுால்.– மலர்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!