Advertisement

மன அழுத்தம் வெல்வோம்...


மன அழுத்தம் வெல்வோம்...

₹ 170

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‘ஸ்ட்ரஸ்’ என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்தாமல் இருப்போர் மிக மிக குறைவு. எல்லாரும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இதற்கு, பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றின் தொகுப்பே இந்த நுால். சரி, மன அழுத்தத்துக்கு உள்ளாவோரில் அதிகம் ஆண்களா, பெண்களா... ஆண் என்றால் அதற்கு என்ன காரணம்; பெண் என்றால் அதற்கு என்ன காரணம்; விடை தேடுவோருக்கு பதில் சொல்கிறார், இந்த நுாலின் ஆசிரியர் டாக்டர் ஏ.வி.சீனிவாசன். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், கோடை மற்றும் குளிர்காலத்தில் கூட மன அழுத்தத்தின் அளவு மற்றும் வகை மாறுபடும் என்பது தான். மன அழுத்தத்திற்கு சிகிச்சை உண்டா... இதற்கு மருந்துகள் கைகொடுக்குமா... என்ற கேள்விகளுக்கும் விடை உண்டு. இன்று ஆட்டிசம் பற்றி அதிகம் பேசுகின்றனர். ஆட்டிசம் என்றால் என்ன? இதற்கு சிகிச்சை உண்டா... என்பது போன்ற சந்தேகங்களுக்கும் இந்த புத்தகம் பதில் தருகிறது. மன அழுத்தம் வந்து விட்டாலே நோயும் கூட வந்துவிடும். என்னென்ன நோய்கள் அவ்வாறு வரும் என எச்சரிக்கையும் செய்கிறது இந்த புத்தகம். மன அழுத்தத்தில் இருந்து மீள, இந்த புத்தகம் வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது. இங்கே சொல்லி இருப்பது மிகவும் குறைவு தான். முழுமையாக மன அழுத்தம் பற்றி தெரிந்து கொள்ள, இந்த புத்தகத்தை ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அவசியம். – தி.செல்லப்பா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்