Advertisement

மனநிறைவுக்கு புதிய வழிகள்

₹ 120

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல், உயிர், மனம் என மூன்றும் நிறைவை பெறுவதே முழுமை வாழ்க்கை என்ற உளவியல் உண்மையை எடுத்துக் கூறும் நுால். வேரில் வெந்நீரைப் பாய்ச்சினால் விளைவு மரமாக இருக்காது... மரக்கட்டையாகத்தான் இருக்கும் என்ற உண்மையை உணர்ந்தால் நல்ல வாழ்க்கை அமைக்க முடியும் என எடுத்துக் காட்டுகிறது. உள்ளத்துக்குத் தேவையான மருந்து வகைகளை எடுத்துரைக்கிறது. மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால் குழப்பம் வரும். பெரும்பாலானோர் இதயத்தில் இருப்பதாக சொல்வர். அது நுண்பொருளாக இருக்கும் உண்மையை உணர்ந்து வசப்படுத்தினால், வாழ்க்கை முழுமை பெறும் என்ற தெளிவு தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்