Advertisement

மன அழுத்தத்தில் இருந்து நிம்மதி

₹ 180

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிம்மதியான வாழ்க்கைக்கு நல்வழிகாட்டியாக உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ் லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை விளக்கும் நுால்.தேவையேயில்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவைகள் கிடைக்காமலே சிலர் மறைகின்றனர். எதிர்பார்ப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் இடையே மனப்பிரச்னை இருக்கிறது. மன அழுத்தமில்லாத வாழ்வு தான் எல்லாரின் கனவாக இருக்கிறது.ஆசைகளை அடைவதற்கும் இடையே வெற்றி இருக்கிறது. தேவைகளுக்கும், கிடைத்தவற்றுக்கும் இடையே மகிழ்ச்சி இருக்கிறது. கிடைத்தவற்றை ஏற்றுக்கொள்வதில் தான் திருப்தி இருக்கிறது. ஒருவர் தமக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை, சுயமாக அறியும் வகையில் விளக்கியிருப்பது சிறப்பு. மனதை வளப்படுத்தும்; வாழ்க்கைக்கும் நல்வழிகாட்டியாக அமையும் நுால்.– டாக்டர் டி.வி.அசோகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்