கார்காலத்து இரவு கும்மிருட்டு... திடீரென்று பளீரிடுகிறது ஒரு மின்னல். அந்த மின்னொளியில் மலை, அருவி, பரந்த புல் தரை, மரங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என காட்சிகள் வருகின்றன. இந்த புத்தகமும் கவிதை மின்னல்களை தந்து கண்கூச வைக்கிறது. அதன் வெளிச்சத்தில் பக்தி, சமுதாயம், உறவு, நட்பு, தனிப்பாடல் என அழகியல் அற்புதங்களால் பிரமிக்க வைக்கிறது.மீனாட்சி திருக்கல்யாணத்தில் கைகூப்பி வரம் கேட்பவர்களை பார்த்திருக்கிறோம்.மீனாட்சி எங்கள் பெண்; மதுரையின் அரசி. காடு மலை சூழ்ந்த கைலாயத்தில் அவள் கஷ்டப்படுவாள். ‘தோடுடையாய் நின் தோள்களில் தாங்கி நிதம் வாடிக்கால் நோகா வண்ணம் நீ காத்திடுவாய்...’மீனாட்சியின் தந்தை நிலையில் இருந்து சொக்கனிடம் கவிதை சொல்லும்போது கண்ணீர் காடு ஆகிறது கண்கள்.நிர்வாண ஷதகத்தில், ‘ந புண்யம் ந பாவம் ந சௌக்யம் ந துக்கம்’ என ஆதிசங்கரர் செய்த முழக்கத்தை அதே வீரியத்துடன் மொழிபெயர்த்துள்ளார் கவிஞர். மனமும் இல்லை; அறிவும் இல்லை; மயங்க வைக்கும்அகந்தை இல்லை... தினமும் என்னை உணரச் செய்யும் தீமை வினை செய் புலனைந்ததில்லை. சங்கரரின் ஞான வெறியை மடைமாற்றும் வல்லமை இந்தக் கவிஞருக்கு மட்டுமே கிடைத்த வரம்.வீட்டில் விளக்கேற்றும் மனைவியர் வாய்த்திருப்பர். ஆனால், விளக்கில் தன்னையே நெய்யாக இடும் மனைவி கவிஞருக்கு மட்டுமே கிடைத்த பேறு.‘விளக்கினில் திரியிடுவாள் – அதில் விட்டுடு நெய்யெனத் தனையிடுவாள்’கவிஞரின் மனைவி, பாடல் பெற்ற தியாகச் சுடரொளியாக மின்னுகிறாள்.‘என்றும் தனக்கென ஒன்றுமிலாள் – என்பும் எனக்கெனச் சொல்லியே ஏந்தி நிற்பாள்’ என்று புகழும்போது, அந்த மாதரசி இருக்கும் திசை நோக்கி கைகூப்புகிறோம். மன வானத்து மின்னல்கள் கவிதைகளின் தொகுப்பு இல்லை; உன்னத உணர்வுகளின் குவியல். வார்த்தைகள் வழியாக வாழ்க்கை வேரையும் காட்ட முடியும் என ஒரு தனிமனித நம்பிக்கைக்கு கிடைத்த தன்னிகரில்லாத வெற்றி.– வரலொட்டி ரெங்கசாமி
மனவானத்து மின்னல்கள்...
-
தணிகேசன் பதிப்பகம்,கடலூர் சி.புதூர், சிறுபாக்கம் அஞ்சல், திட்டக்குடி - வட்டம், கடலூர்-606 123. (பக்கம்: 544.) பறவைகளுக்குத் தொழில் பறத்தல்; கவிஞர்களுக்குக் கவிதை. பிறவிக் கவியாக திகழ்பவருக்கு சொல்ல வேண்டுமோ?இறைவன் - தமிழ் - இயற்கை - காதல் - தத்துவம்-நாட்டு நடப்பு - தலைவர்கள் - தேசியம் - சமூகம் - சிறுவர்கள் - சமூகக் கேடுகள் - கொந்தளிப்பு - களிப்பு - அறிவுரை - கனிவுரை என 400 பாடல்களுக்கும் மேல் இந்நூலில் இடம் பெறுகிறது. புதிய கருத்துக்கள் - புதிய நோக்கு - நூதன உரசல் - அலசல் சற்று தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நல்ல மரபுக்கவிதை நூல்.
-
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. ( பக்கம்:88)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள். இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.
-
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்:80)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள்.இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.
-
நல்ல மரபுக் கவிதைகள் இடம் பெற்றுள்ள சிறந்த கவிதைத் தொகுப்பு. தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் தம் பெருமை காதல்- என்றெல்லாம் பல பொருட்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கவிதைகள் பலரின் கவனத்தைக் கவர வேண்டியவை. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பதை சில கவிதைகளில் காண்கிறோம். பேரவையின் சீற்றத்தைக் கண்டு சினந்தெழுந்து எழுதுகையில் (ஆண்டவனா?) கவிஞர் கடவுளையே சபித்து தீர்த்து விட்டார். குழந்தைகளுக்கும் இதில் சில மரபுக் கவிதைகள். உள்ளபடியே இவர் தன்னை கவிஞர் எனக் கூறிக் கொள்ள எல்லாத் தகுதியும் இவருக்கு இருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை நூல் கட்டியம் கூறுகிறது.
-
இளந்திரை பதிப்பகம், 2/78, ஜி.ஆர்., நகர், மதுரை-625 007. (பக்கம்: 104). ஆசிரியரின் 48 புதுக்கவிதைகள். பொறுமையும் நேரமும் இருந்தால் வாசித்து மகிழலாம்.
-
பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்:96)அருட்செல்வரின் கழனியில் விளைந்த ஆல விழுதின் ஆணிவேர் இக்கவிஞர். கவிஞர் பெ.சிதம்பரநாதனின் கவிதைப் படைப்பான "பொய்கை' பழனியப்பா பிரதர்ஸ் வழி முகிழ்ந்து வந்திருக்கிறது. பல்வேறு மலர்கள் பிறந்து, வளர்ந்து, மணம் பரப்பி, உளம் மகிழ வைக்கும் நீர்ப்பரப்பு தான் பொய்கை. அங்கே அல்லியும், ஆம்பலும்; கமலமும் குவளையும், குமுதமும் மலர்ந்து விரிந்து கிடக்கும் மலர்ப்படுகை. அது போலவே இந்நூலில் கம்பனின் ராமாயணத்தில் துவங்கி, வள்ளலார், காந்தி, பாரதி, புத்தர் என இம்மண்ணில் வாழ்ந்து, வள்ளுவன் வாய்மொழிந்த வாழ்வியல் நெறிகளை, தங்களது வாழ்வின் வேள்வியாய்க் கொண்டு, வாழ்ந்து காட்டிய சரித்திரமாய் நிற்கின்ற பெருமக்களது போதனைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு ஞானக்களஞ்சியம் இக்கவிதை நூல்.இதில் ஆசிரியரது பரிவு, வேட்கை, கோபம், துணிவு, சொல்லாட்சி, கவிதை இன்பம் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பல கவிதைகளில் விரவி இருப்பதையும் பார்க்க முடிகிறது.
-
ஜெயச்சித்ரா, 6.தாளமுத்துப் பிள்ளை சந்து,வடக்குமாசி வீதி, மதுரை-1 (பக்கம்-84). கவி அரங்குகளில் தான் வாசித்தவற்றையும், தனது மனம் கவர்ந்த தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றி எழுதியவற்றையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர், காமராஜர், கலாம் ஆகியோரை பற்றி எழுதப்பட்டுள்ள கவிதைகள் இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. நாடு, மொழி, சமத்துவம் ஆகியவற்றை பெரிதும் விரும்புவோருக்கு இந்நூல் மிகப் பெரிய பரிசு.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.பக். 96. மனிதன், மனிதனுக்கு கூறியது குறள் என்று குறிப்பிடுவர். திருக்குறள் மனித வாழ்க்கையின் வழிகாட்டி நூல். அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளை விளக்கியுள்ளார் திருவள்ளுவர். இன்றைய காலகட்டத்தில், பாலியல், சமூகத்தில் பல கோரமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதற்கெல்லாம் காரணம், பாலியல் பற்றிய அறியாமையும், தவறான புரிந்து கொள்ளலுமே! காமத்துப்பாலில், கணவன்-மனைவி உறவு எப்படி இருப்பது சிறப்பு என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை அறிந்துகொண்டால், பாலியல் சம்பந்தமான பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.காமத்துப்பாலில் உள்ள 250 குறள்களுக் கான விளக்கத்தை புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் கவிஞர் தெய்வச்சிலை. இதைப் படித்தால், பாலியல் பற்றிய தவறான பார்வை மாறுவது உறுதி!
-
பொன்னி, 2/1758, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. (பக்கம்: 80)"வாழ்வின் கட்டமைப்பிலிருந்து அது தரும் அனுபவத்திலிருந்தும் நேரடியாகவும், பூடகமாகவும் சமூகத்தின் அறியாமையில் இருந்து விழிப்புக்காக என் கவிதைகள் உருவாகின்றன என்றால் மிகையில்லை' என்று கூறும் ஆசு என்கிற ஆ.சுப்ரமணியனின் இக்கவிதைத் தொகுப்பில், 62 புதுக்கவிதைகள் உள்ளன.""காவிய நடை முகிழ்ந்தஅவளோர் தீயின் பிறை''என சோதிமிகு பெண்ணையும்,""ஞாபகங்களின் சிக்குடைத்து வெளிறிய முகத்தில்ஒரு கண்ணீர்ப் பெருக்கு''என மவுனம் உடைத்த கவியாகி, இருந்தும் - இல்லாதது போல் எல்லாம் தெரிந்த அனுபவ அறிவைப் பல கவிதைகளில் இழையோடச் செய்துள்ளார். எனினும், கவிதைக் கட்டமைப்பு வாசகனைக் கவருவதாய் அமையவில்லை. பல இடங்களில் இடறச் செய்கின்றன
-
தாழையான் பதிப்பகம், 15 (4), அண்ணாமலை நகர், மூன்றாம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 64). உரைநடை ஒப்பனை செய்து கொள்ளும்போது பாடலாகிறது. அது காலில் சதங்கை கட்டிக் கொள்ளும்போது இசைப் பாடலாகிறது. ஆசிரியர் இசைப் பாடலின் மூலம் இதயத்தில் உள்ளதை நடைபயிலச் செய்துள்ளார். 54 அருமையான கவிதைகள். கவிதைப் பிரியர்களுக்கு கவிதை விருந்து.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தேவி, 4/5, முதல் குறுக்குத் தெரு, ஜானகிராமன் குடியிருப்பு, வில்லிவாக்கம், சென்னை-49, (பக்கம்: 128) நல்ல கவிதைகள் நம் மனத்தைத் தொடும்; மன மாசு போக்கும்; துன்ப நிலையை மாற்றும்; சுகம் பல தரும். அத்தகு வாய்ப்பும், வலிமையும் கவிதைகளுக்கு இருப்பதால் தான் கவிதை நூல்கள் பல தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இக்கவிதை நூலும் அவ்வகையில் ஒன்று"சுட்டும் விரல் நீ சுழற்றிவிடு சுழலும் பூமி கைப்பந்து, நெட்டை விரல் நீ நீட்டிவிடு நிமிர்ந்த வானம் கைவசந்தான்' என்று தன்னம்பிக்கையே, இதற்கு ஓர் உதாரணம். அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்
-
106/4, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).கண்ணதாசன் ஒரு ஜீவநதியாக இருந்து மற்ற கிளை நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் கற்பனையைத் தந்திருக்கிறார். இந்நூலில் வாழ்வில் கடந்த சுவையான 100 சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
-
திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா சாலை, சென்னை-600017. (பக்கம்:103)ஆசிரியரின் புதுக்கவிதைகளின் ஊர்வலமாய் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமான ஒரு புகைப்படம் என புத்தகத்தை அமர்க்களமாகத் தயாரித்திருக்கின்றனர். அரசியல் சாக்கடையா? என்று ஒரு கேள்வி எழுப்பிவிட்டு அதற்கு ஆசிரியர் கூறும் பதிலில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. இது போல் ஆழ்ந்த கருத்துக்கள் ஆங்காங்கு தென்படுகின்றன
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்