Advertisement

நலம் தரும் நாட்டு மருந்துகள்


நலம் தரும் நாட்டு மருந்துகள்

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கை மருத்துவ முறைகள், ஆர்கானிக் உணவுகள் இவற்றை பயன்படுத்துவதில் சமீப ஆண்டுகளில் நிறைய ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக ஆங்கில மருந்துகளை நாடாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நிவாரணம் தேடும் பழக்கமும் அதிகரித்து உள்ளது. இந்தப் புத்தகத்தில், சாப்பாட்டில், மோர், தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இரவில் அதிகம் சாப்பிடக் கூடாது. வெதுவெதுப்பான நீரில், உப்பு போட்டு கொப்பளித்தால், தொண்டை புண் சரியாகும் என்று பெரும்பாலும் தெரிந்த விஷயங்களோடு, இரவில், புல்லின் மீது மெல்லிய துணியை விரித்து வைத்து, காலையில் துணியை பிழிந்து முகத்தில் தடவி வர, முகம் பளபளக்கும் என்று அதிகம் தெரியாத விஷயங்களையும் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. இதில் கூறப்பட்டுள்ள விபரங்கள் எந்த அளவிற்கு மருத்துவ அங்கீகாரம் அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தாமல் உதவும் என்ற கேள்வியும் எழுகிறது. பழங்களும், காய்கறிகளும், இலை, தழைகளும் அதன் பயன்களும் தரப்பட்டிருப்பதால், முயற்சித்துப் பார்க்கலாம்.கீதா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்