Advertisement

பயம்

₹ 350

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனநல மருத்துவர் எழுதியுள்ள நுால். குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனையில் காவல் துறைக்கும் உதவுகிறார். திக்குவாய், பேச்சுத் தடைகளையும் நீக்குகிறார். இவர் அனுபவங்கள் நீண்டு நுாலாகி, வானில் பட்டமாக உயர்த்துகின்றன.பயம் எப்படி உடலையும், மனதையும் பாதிக்கிறது என்பதை 20 தலைப்புகளில் விளக்குகிறார். எண்ணங்களின் குவியல் மனம். அது ஆத்மாவில் அடங்கிவிட்டால் ஆன்ம சுகம் வந்துவிடுகிறது என்ற பகவான் ரமணரின் தவமொழியுடன் துவங்குகிறார். ஆழ்மனதில் பயத்தை அழித்துவிட்டால், நோயிலிருந்து விடுதலை பெற்றுவிடலாம். பயத்தைப் போக்கும் பயனுள்ள நுால்.– முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்