Advertisement

புவி வெப்பம் ஆவதை தடுப்போம்!


புவி வெப்பம் ஆவதை தடுப்போம்!

₹ 80

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு போராளிகளை அறிமுகம் செய்யும் நுால். சுற்றுச்சூழல் நெருக்கடி குறித்து எச்சரிக்கை மணியை ஒலித்து போராட்டங்களை முன்னெடுத்தது பற்றி கூறப்பட்டுள்ளது. புவி வெப்பமாவதற்கு காரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த நம்மாழ்வார், 8,000 ஆலமரங்களை வளர்த்த திம்மாக்கா பற்றி பதிவிடப்பட்டுள்ளது. சோலை காடுகளின் அழிவு, கனிம வளங்கள் கொள்ளை, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவரும் டெல்டா பகுதி பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசுமை கிராமங்கள் உருவாக பாடுபடும் சுனிதா நரேன் முயற்சிகளும் விவரிக்கப்பட்டுள்ளன. புவி வெப்பமாவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நுால்.– புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்