முகப்பு » ஆன்மிகம் » சைவ சித்தாந்தத்தில் ஆன்மக் கொள்கை

சைவ சித்தாந்தத்தில் ஆன்மக் கொள்கை

விலைரூ.65

ஆசிரியர் : வை.இரத்தினசபாபதி

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. (பக்: 213)

அறத்தைக் கடைப்பிடித்து மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து இன்புறுதல் என்பதே வாழ்வின் நோக்கம். இந்த அடிப்படையில் சைவ சித்தாந்தக் கொள்கையைப் புதிய அணுகுமுறையில் எடுத்துக் காட்டியுள்ளார் பேராசிரியர் முனைவர் வை.இரத்தின சபாபதி.

இறைவன் என்னும் பெயர் எப்பொருளிலும் தங்குபன் என்று வழங்கப் பெற்று சிவபெருமானையே குறிப்பதாகக் கொள்ளலாம் என்பதைப் பல சான்றுகள் மூலம் சொல்கிறார் (பக். 5). ஆன்மா இறைவன் ஆகாது; இறைவனோடு நிகர் ஆகாது; ஆயினும், அறிவுடைப் பொருள் என்ற வகையில் இரண்டும் ஓரினப் பொருளே என்கிறார்.

திருமுருகாற்றுப் படையின் சில வரிகளைக் குறிப்பிட்டுப் பரம் என்ற மேலான பொருளினுடைய நிலைகளை எடுத்து இயம்பியுள்ளார் (பக்.14) மாணிக்க வாசகரின் திருவாசகத்தையும் சுட்டிக்காட்டி விடுதலை என்ன என்பதைக் கூறியுள்ளார்.

வேதங்களையும், வடமொழி நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சைவக் கொள்கையை எவ்வாறு எடுத்து இயம்புகின்றனர் என்பதை நயம்பட ஆய்வு செய்துள்ளார் (பக்.37)

சைவ சித்தாந்தம் நிலை நிறுத்தும் கொள்கைகள் `சுத்தாத் வைதம்' என்ற பொருளில் அடங்கி விடும். ஆனால், சுத்தாத் வைதம் உணர்த்தும் சிலவற்றை சைவ சித்தாந்தம் வெளிப்படுத்தாது. (பக்.47)

"ஒற்றை நாணயத்தின் இரட்டைப் பக்கங்களைப் போல சுத்தாத் வைத நிலை பேற்று உணர்வாகிய சிவயோகமே சுத்தாத் வைத நிலை' என்பதை முனைவர் மிக அருமையாக எளிய தமிழில் கூறுகிறார். (பக்.64)

திருஞானசம்பந்தர் காலத்துக்கு முற்பட்ட திருமூலர் காலத்திலேயே `சைவ சித்தாந்தம்' என்ற சொல் வழக்குக்கு வந்து விட்டது; (பக்.81) மெய்கண்டார் போன்றவர்கள் அமைத்த கொள்கையே சைவ சித்தாந்தக் கொள்கை எனக் கொள்ளல் வேண்டும் என்கிறார்.

திருஞானசம்பந்தரின் நெறியின் நீர்மை, காரைக்கால் அம்மையாரின் அரன் என்பது அருமை உடையவன், வள்ளலாரின் பெருநெறி, அப்பர் அடிகளின் பெருநெறி போன்றவைகள் நூலில் விளக்கப்படுகின்றன.

பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களும் அனாதி நித்தியப் பொருட்களே என்பதை சைவ சித்தாந்தம் ஏற்கிறது. இந்த முப்பொருள்களின் அமைப்புகளை திருமூலர் திருமந்திரம், சிவப்பிரகாசச் செய்யுள்கள் மூலம் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள "ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு' குறளின் பொருளையும் நினைவூட்டுகிறார்.

உடலின் வேறாக உயிர் என்ற ஒன்று உண்டு என்பது சைவ சித்தாந்தக் கொள்கை என்றும் அத்துடன் பலவிதமான `ஆன்மவாதிகளை' விவரமாகக் கூறியும் உள்ளார். பிரம்மத்தின் அறிவை முற்றறிவு என்றும், ஆன்மாவின் அறிவைச் சிற்றறிவு என்றும் சைவ சித்தாந்தம் வரையறை செய்கிறது.

திருஞானசம்பந்தரின் `இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்' என்பது, `மறு இலா மறை'யாகும் என்பதை வடமொழியில் உள்ள மகாவாக்கியங்களுடன் ஒப்பிட்டு, சமநோக்கோடு பார்த்து ஆய்வு செய்துள்ளார்.

ஆன்மாவுக்கு நிலைக்களனாகிய சரீரங்கள் புருடனைப் பற்றிய ஆய்வு முதலிய வை விளக்கப்பட்டுள்ளன. பின் இணைப் புகள் இரண்டும் பன்னிரு திருமுறைகளையும், மெய்கண்ட சாத்திரங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. இவை வரலாற்றுத் தடயங்களை விரிவாகக் கூறுகின்றன.

திருமுறைகள், ஆசிரியர்கள், நூல்களின் பெயர்கள் இவைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

இந்நூல் விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்


படைப

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us