முகப்பு » மாணவருக்காக » உன் வாழ்க்கை உன் கையில்

உன் வாழ்க்கை உன் கையில்

விலைரூ.50

ஆசிரியர் : கமலா கந்தசாமி

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய நல்ல கருத்துக்களை வழங்கும் நுால். படிப்பு பண்படுத்தும், உயர்த்தும் என்பதோடு, நுால்களுடன் தான் ஒரு தலைச்சிறந்த சமூகம் உருவாக முடியும் என்கிறது. ஆளுமையை வளர்க்க உதவுகிற நியதிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. ஆளுமைத் திறத்தையும், முறைகளையும் ஒழுங்காக கவனத்துடன் பின்பற்றி, ஒவ்வொருவரும் தன் ஆளுமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது. எதிலும் துணிந்து உண்மையாக இருக்க வேண்டும். தோல்விகள் வரும், அவற்றைப் பாடங்களாகக் கொண்டு வெற்றிப் பாதையை நோக்கிச் செல்ல உதவுகிறது.

கனவு காண்; நம்பிக்கை உன் கனவாகட்டும்; நம்பிக்கை இல்லாத எச்செயலும் வெற்றி பெறாது; போவது சரியான பாதையாக இல்லாத போது வேகமாக ஓடுவதால் என்ன பயன் என இளைய சமூகத்திற்கான பதிவுகளை கொண்டுள்ளது. பரிசளிக்கவும், வாங்கிப் படிக்கவும் ஏற்ற நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us