/ மாணவருக்காக / 100 இளைஞர்களுக்கு

₹ 30

இளைஞர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றும் வகையில் சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிக்க வாழ்க்கை மற்றும் போதனையை எளிய நடையில் தரும் நுால். ஒவ்வொரு மனிதனுக்கும் லட்சியம் இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறது. நாட்டின் வளர்ச்சி யில் இணைந்து பங்காற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. லட்சியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. விவேகானந்தர் அறிவுரைத்த கருத்துக்கள் மிகவும் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருத்தையும் பின்பற்றுவது நடைமுறையில் விவரிக்கப்பட்டுள்ளது. உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை கைவிடக் கூடாது என்கிறது. சுவாமி விவேகானந்தரின் அர்த்தமுள்ள வாழ்க்கை வழியாக நல்லறிவை ஊட்டும் நுால். – ஒளி