/ சுய முன்னேற்றம் / 100 சுய முன்னேற்ற சிந்தனைகள்
100 சுய முன்னேற்ற சிந்தனைகள்
சிரமப்படுவதாக தோன்றும் எண்ணத்தின் மீது கேள்வி எழுப்பி, நம்பிக்கையுடன் முன்னேற கருத்துக்களை முன் வைக்கும் நுால். கஷ்டம் என்பது பொதுவானது. அது பற்றி விசாரித்தால் உண்மை நிலையை தெரிந்து, தெளிந்து கஷ்டத்தை குறைக்கலாம் என்ற கருத்தை முன்னிலைப்படுத்துகிறது.மனித குணத்தை எடை போட்டு, மாற்றி யோசித்து முன்னேற வழிகாட்டும் கருத்துக்களை கொண்டுள்ளது. முதியவர், இளைஞர் என யாராக இருந்தாலும் செயலில் உற்சாகம் காட்ட வேண்டும். குற்றம் காண்பது சாத்தியம் என்றால், நல்லதை காண்பதும் சாத்தியம் தானே என போதிக்கிறது. – சீத்தலைச் சாத்தன்