/ ஆன்மிகம் / 108 திவ்ய தேசங்கள்
108 திவ்ய தேசங்கள்
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய 108 வைணவத் தலங்களை பற்றிய நுால். மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் பற்றிய வியத்தகு தகவல்களைத் தருகிறது. பெருமாள் தரை தளத்தில் சயனித்துள்ள ஒரே தலம். உற்சவர் கையில் தாமரை ஏந்தியுள்ள ஒரே தலம். பல்லவ மன்னன் ஏற்படுத்திய தலம் போன்ற சிறப்புகளைக் கொண்டுள்ளது. திவ்ய தேசங்கள், மாவட்ட வாரியாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் சிறப்பும், செய்ய வேண்டிய பரிகாரங்களும், நேர்த்திக் கடனும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. மூலவர் உற்சவர், தீர்த்தம், விமானம், நின்ற கோலம், கிடந்த கோலம் முறையாகக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் அறிய கியூஆர் கோடு வசதி தரப்பட்டுள்ளது. நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போல் உள்ளது. திருக்கோவில் பற்றி ஆய்வு செய்வதற்கு பயன்படும் நுால்.– முனைவர் இரா.நாராயணன்