/ ஆன்மிகம் / 108 வைஷ்ணவ திருத்தல மகிமை
108 வைஷ்ணவ திருத்தல மகிமை
வைணவத் திருத்தலங்கள் பற்றிய தகவல்களை தரும் நுால். ஊர், மூலவர், தாயார், ஆழ்வார்களின் மங்களாசாசன தகவல், தல வரலாறு, விமான அமைப்பு, போக்குவரத்து வசதிகளை பதிவு செய்துள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குப் பஞ்ச வீரத்தலம் என்ற சிறப்பு பெயரும் உள்ளதைக் குறிப்பிடுகிறது. வீரராகவ பெருமாள் வீற்றிருக்கும் திருஎவ்வுள் தலமே, காலப்போக்கில் திருவள்ளூர் என மருவியதை காண முடிகிறது. மலையைச் சுற்றி துாய நீர் சூழ்ந்திருந்ததால் திருநீர்மலை எனப் பெயர் பெற்றதும் தெரிய வருகிறது. திருப்பதி ஏழுமலை அமைப்பும், வரலாறும் விரிவாக உரைக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலும் வைணவப் பரவல் ஏற்பட்டிருப்பதை அறிய தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு