2015 – தினகரன் பொங்கல் மலர்
தைப் பொங்கல் தமிழர் திருநாளையொட்டி, ‘தினகரன் பொங்கல் மலர்’ வெளிவந்திருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை முன்னிலைப்படுத்தி, கதை, கவிதை போன்ற வழக்கமான மலர் சம்பிரதாயங்களை தவிர்த்து, புதுமையாக இந்த மலரை தயாரித்து உள்ளனர். ஒவ்வொரு செயலிலும் அறிவியலை இணைத்தது தமிழ் மரபு. உணவிலும், உடையிலும், கலைகளிலும், வீரத்திலும், விளையாட்டிலும், தமிழர்களுக்கு தனித்துவமான அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களின் வேர்களைத் தேடும் அற்புதமான கட்டுரைகள், இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.பழம்பெருமை மட்டும் பேசாமல், நவீன சிந்தனைகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இளமையாகவும், புதுமையாகவும் திகழ்கிறது. சென்னையில் அறிய காட்சிகள் மற்றும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு, அந்தக் காலப் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் ‘மிளகால் உருவான மெட்ராஸ் எனும் நகரம்’ கட்டுரை சென்னை நகர வளர்ச்சியை படம் பிடித்து காட்டுகிறது.