/ ஆன்மிகம் / 27 இந்திய சித்தர்கள்

₹ 65

விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-2. (பக்கம்: 144) "சித்தம் போக்கு சிவம் போக்கு என்றிருக்கும் சித்தர்கள் குறித்து, எண்ணற்ற நூல்கள் தற்போது வெளிவருகின்றன. உலகியலை துறந்து, இறை நிலையை முழுமையாக அடைந்த இவர்களை பற்றியதோர் விழிப்புணர்ச்சி பரவியதன் அடையாளம். செவி வழி, வாய் வழி செய்திகள் மற்றும் பல்வேறு நூல்களில் பொதிந்தவற்றை தொகுத்து, ஒரு சிறு நூலில் சித்தர்கள் குறித்த அத்தனை தகவல்களையும் தொகுத்து, ஓர் அறிவுப் பெட்டகமாக வழங்கியுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். * காசி மன்னனின் மூளைப் பகுதியில் தேரை ஒன்று இருப்பதைக் கண்ட அகத்தியர், கபால வெட்டு சிகிச்சை மூலம் அதை அகற்றி குணப்படுத்துதல். * சிவ வாக்கிய சித்தர் கொணர்ந்த மணல் அரிசியையும், படு சுரைக்காயையும் சுவையாக சமைத்து பரிமாறியதோர் ஒரு குறப்பெண் அவருக்கு மனைவி ஆகுதல். * இறந்த மன்னன் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து உயிர்ப்பித்த திருமூலர்... என்று பல செவி வழிக் கதைகளும் உள்ளன. இந்த சித்தர்களது சிலைகள், உருவப் படங்கள் ஏதுமில்லாத நிலையில், ஓவிய கலைஞர் எம்.ஆர்.சதாசிவம், தனது கற்பனை திறனை ஓடவிட்டு உயிரூட்டிய சித்திரங்கள் பேசுகின்றன. இவை நூலுக்கு அணிகலன்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை