/ கவிதைகள் / அறுபத்து மூன்று நாயன்மார்களும் பன்னிரு ஆழ்வார்களும்
அறுபத்து மூன்று நாயன்மார்களும் பன்னிரு ஆழ்வார்களும்
நாயன்மார், ஆழ்வார்கள் வரலாற்றை வெண்பாவாக தந்துள்ள நுால். நாயன்மார்கள் உடலையும், உயிரையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்த தெய்வீக வரலாற்றை விளக்குகிறது. இறைத்தொண்டு செய்து முக்தி அடைந்தோர் என குறிப்பிடுகிறது. பக்தியில் ஆழ்ந்து விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் ஆழ்வார்கள். ஒவ்வொரு அருளாளர் வரலாறும் ௧௦ வெண்பாக்களில் இடம் பெற்றுள்ளன. அதிபத்த நாயனார் அதிபக்தி கொண்டு விளங்கியதை சொல்கிறது. முதலில் பிடித்த மீனை இறைவனுக்கே படைத்து முக்தி அடைந்ததை குறிப்பிடுகிறது. உள்ளமே கோவில் என உணர்ந்த பூசலார் வரலாற்றை நயம்பட உரைக்கிறது. அருளாளர் வரலாற்றை அறியத்தரும் நுால். – புலவர் ரா.நாராயணன்




