/ கட்டுரைகள் / ஒரு நூற்றாண்டின் தவம்

₹ 700

புத்தகம் எழுதுபவர், ஏதாவது ஒரு கருப்பொருளை மையமாக வைத்திருப்பது வழக்கம். ஆனால், ஒரு நுாற்றாண்டின் தவம் என்ற தலைப்பிலான இந்த புத்தகம் விளையாட்டு, அரசியல், நீதித் துறை, சர்வதேச பிரச்னைகள், கல்வி, நிர்வாகம், சுகாதாரம் என பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து கருத்துகளை தெரிவிக்கிறது. மக்களை தற்போது பாதிக்கும் முக்கிய பிரச்னை பருவநிலை மாற்றம். அது குறித்து தீர்வை பெறும் வகையில் அலசப்பட்டு உள்ளது. பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மதுவிலக்கு, அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் சட்ட மசோதா என பல பொருண்மைகள் குறித்தும் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி., மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., என்ற உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்பதை விவரிக்கும் வகையில் தகவல் நிறைந்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கும் உள்ஒதுக்கீட்டின் அவசியம், எதிர்காலத்தில் இன்டர் நெட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட விஷயங்களையும் ஆய்வு செய்துள்ளது. நீண்ட நாள் கனவான நதிநீர் இணைப்பு பற்றியும் பேசப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு ஒரே தீர்வு நதிகள் இணைப்பு தான். எந்தெந்த நதிகளை இணைத்தால் தமிழகம் வளம் பெறும் என்பது உள்ளிட்ட தகவல்களும் உள்ளன. எளிய நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள நுால். – தி.செல்லப்பா


முக்கிய வீடியோ