/ கேள்வி - பதில் / நூறு கேள்விகளுக்கு அசத்தலான ஆயிரம் பதில்கள்
நூறு கேள்விகளுக்கு அசத்தலான ஆயிரம் பதில்கள்
சிந்தனையை துாண்டும் கேள்விகளுக்கு, சமூக ஆர்வலர்கள் தந்துள்ள பதில்களின் தொகுப்பு நுால். பெற்றோர் குறித்து விளக்கம் கேட்டதற்கு, ‘இரு விழிகள் போல் இந்த உயிர் உலகத்திற்கு வர காரணமானோர்’ என பதில் தரப்பட்டுள்ளது. தனிக்குடித்தனத்தை விளக்க, வளர்ச்சி, செயற்கை அழகு, தனிமரம் தோப்பாகாது போன்ற பதில்கள் உள்ளன. வாழ்க்கை, இன்பம் பாதி துன்பம் பாதி என்கிறது. கணவன் – மனைவி உறவில் வெளிப்படையாக, விட்டு கொடுக்க வேண்டும் என அறிவுரை தரப்பட்டுள்ளது. திரு மணம் எப்போது வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, ‘தள்ளாத காலத்திலும் தள்ளிப்போகாத அன்பே வெற்றி வாழ்வு’ என்கிறது. வாழ்க்கையுடன் ஒன்றிய கேள்வி – பதில் நுால். – டி.எஸ்.ராயன்




