/ கதைகள் / ஆத்திசூடிக் கதைகள்

₹ 180

பழந்தமிழ் இலக்கியமான ஆத்திசூடியில், 37 பாடல்களை மையப்படுத்தி படைக்கப்பட்ட நீதிக்கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்களுக்கு ஆத்திசூடி நீதிநெறி விளக்கம் கிடைக்கும் வகையில் உள்ளது. முதல் பாடலான, ‘அறம் செய விரும்பு’ கருத்தில், ‘தர்மம் பரிசு’ என்ற கதை உள்ளது. ஏழை பெண்ணிடம் மோர் வாங்கி குடித்தவர், நன்றி மறவாமல் பசுக்களை தானம் கொடுத்து வள்ளலாக மாறியதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘தந்தை தாய் பேண்’ என்ற பாடலை மையப்படுத்தும் , ‘முதியோர் இல்லம்’ கதையில் நல்ல நீதி உள்ளது. பெற்றோரை முதியோர் விடுதியில் விடுவது தவறு என வலியுறுத்துகிறது. எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளது. பொருத்தமான படங்களுடன் அமைந்த தொகுப்பு நுால். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ