/ கட்டுரைகள் / அப்துற்–றஹீம் முன்னுரைகள்

₹ 200

முன்னுரைகளை, ஒரு புத்தகத்தின் நெற்றிப் பொட்டு எனலாம். இந்தப் புத்தகம், அதிலிருந்து சற்று வேறுபடுகிறது. காரணம், இதில் மொத்தமும் முன்னுரைகள் தான் உள்ளன. பன்னுாலாசிரியராக அறியப்படும் அப்துற் றஹீம், நுாற்றுக்கணக்கான நுால்களை எழுதியுள்ளார். அதில் இடம் பெற்ற முன்னுரைகளை புத்தகமாக தொகுத்துள்ளார், அவரது மகள் பாத்திமா ஷாஜஹான்.ஒற்றைப் புத்தகத்தில், அரேபியாவின் அதிபதி, வாழ்வரசி, சரவிளக்கு, ஐஸன் ஹோவர், வாழ்வது ஒரு கலை, முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், வலிமார்கள், நபிமார்கள் வரலாறு, குணத்தின் குன்று உட்பட, 64 புத்தகங்களின் அறிமுகமும் உள்ளடங்கி இருக்கிறது.– மேதகன்


சமீபத்திய செய்தி