/ ஆன்மிகம் / அபிராமி அந்தாதி விருத்தியுரையுடன்

₹ 110

ஆயுள் வரம் அருளும் திருக்கடவூர் ஈசன் துணை அபிராமியை போற்றிப் பாடிய பாடல்களும், அதற்கான விளக்கமும் தரும் நுால். விருத்தி உரை என்ற சொல் எளிமையாக உள்ளது. சந்தி பிரித்து படிக்க எளிமையாக தரப்பட்டுள்ளது.நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும், நினைப்பதும்... என்பதில் எவ்வளவு கருத்து வளம்.காலன் வரும் போது காக்க வேண்டுதல், இறப்பிற்கு அஞ்சி ஏத்துதல், இறக்கும் போது எழுதி எய்த வேண்டல் என்று இரவா புகழ் சொல்லும் பாடல்கள் உள்ளன.‘மணியே மணியின் ஒளியே’ என்பது மனம் உருகி துதிக்க வேண்டிய பாசுரம். ‘நாயகன் நான் முனி நாராயணி’ என பாடலில் சந்தம் கொஞ்சுகிறது.தினம் படித்து பயன் பெற உதவும் நுால்.– சீத்தலைச் சாத்தன்


முக்கிய வீடியோ