/ ஆன்மிகம் / அபிராமி அந்தாதி - 3
அபிராமி அந்தாதி - 3
எச்.1024, ஸ்ரீமீனாட்சி அபார்ட்மென்ட், எல்லிஸ் நகர், மதுரை - 625016. (பக்கம்: 440) அபிராமிபட்டர் அருளிய அபிராமி அந்தாதிப்பாடல்களைத் தமிழகத்தில் ஆன்மிக அன்பர்கள் பலரும், விரும்பிக் கேட்பதோடு மட்டுமல்லாமல், பலர் அப்பாடல்களைப் பாடியும் மகிழ்வர். அத்தகு சிறப்பு வாய்ந்த அபிராமி அந்தாதிப் பாடல்களின் முதல் 50 பாடல்களுக்கு, இவ்வுரையாசிரியர் ஏற்கனவே உரையெழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் 51 முதல் 75 வரை உள்ள பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். இந்நூலின் உரை விளக்கம் மிகச்சிறப்பாக இருப்பினும், அச்சுப்பிழைகள் பல இடங்களில் உள்ளன.