/ கவிதைகள் / அச்சமேன் மானுடவா?
அச்சமேன் மானுடவா?
சமூக நிகழ்வுகளை மையமாக்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். தேவையை நிறைவேற்ற எந்த இடத்திலும் ஒரு கூட்டம் எப்போதும் கூடியிருக்கும் என்கிறது. ஒரு வாசகனின் பங்கேற்பை, ‘வாசிப்பு கவிதை’ எதார்த்தம் குறையாமல் வெளிப்படுத்துகிறது. வணிக ரீதியான தாக்கம் மக்களை எந்த வகையில் பாழ்படுத்தும் என சுட்டிக்காட்டுகிறது. துரோகத்தின் மிச்சமாகவும், வாழ்க்கை துயரத்தின் மிச்சமாகவும் வரலாறு கிடைப்பதாக தெரிவிக்கிறது. பணத்தை வைத்து முடிவு செய்யும் வர்க்கத்தை பகடி செய்கிறது. காவல் நிலையம், நீதிமன்றத்தில் கிடைக்கும் கேள்வியும், அரசு அலுவலகம், கோவில் அல்ல நோய் கூண்டு என சுட்டுகிறது. ஏற்றத் தாழ்வுகளால் சாமானியன் அவதியை கூறுகிறது. சமூக அவலங்களை கவிதை வழியாக எடுத்துரைக்கும் நுால். – டி.எஸ்.ராயன்




