/ ஆன்மிகம் / அகத்தியர் தேவாரத் திரட்டு

₹ 70

அகத்தியர் தேவாரத் திரட்டு உருவான வரலாற்றை அழகுற விளக்கும் நுால். தேவாரம் பாடிய மூவரின் வரலாறும், முக்கிய சம்பவங்களும் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் பாடியவை எத்தனை என்ற தகவல் பெருமுயற்சியுடன் தொகுக்கப்பட்டுள்ளது. மூவர் பாடிய தேவாரமும் ஏழு திருமுறையாக அமைந்துள்ளதை விளக்குகிறது. மூவர் தேவாரத்தில் 25 பதிகங்களை சுட்டிக்காட்டி, இவற்றை ஓதினால் அனைத்து பலன்களும் கிடைக்கும் என அகத்தியர் அருளியதை குறிப்பிடுகிறது. எல்லை காண முடியாத விசும்பையும் தாண்டி நிற்கிறது சிவனின் திருவடிகள் என பக்தியை போற்றுகிறது. சிவனடியார்கள் ஒவ்வொருவரும் பாராயணம் செய்ய வேண்டிய பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை