/ கதைகள் / அக்னியின் காந்தம்
அக்னியின் காந்தம்
நவீன வாழ்க்கை முறை சார்ந்து புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முரண்பட்டுள்ள சமூக நடைமுறையை காட்டுகின்றன. தொகுப்பில் 21 கதைகள் உள்ளன. கடினமான செயல்களை செய்யும்போது பெரியோரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற நீதியை சொல்கிறது முதல் கதை. தொகுப்பு ஆசிரியருக்கு எட்டு வயதான போது எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைகளும் காதல், பகை, சமூக சீரழிவு, சமுதாய சீர்திருத்தம் என பல்வேறு வகையில் அமைந்துள்ளன. பாரம்பரிய கலாசாரம் மற்றும் பண்பாட்டு சூழலை, நவீன வாழ்க்கை முறையில் அமைந்த பழக்க வழக்கம் எப்படி எல்லாம் சிதைத்து வருகிறது என்ற மையக்கருத்துடன் எடுத்துரைக்கின்றன. இயல்பான உரையாடல் நடை வழியாக புனையப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ராம்