/ தமிழ்மொழி / ஐங்குறுநுாறு: மூலமும் பழைய உரையும்
ஐங்குறுநுாறு: மூலமும் பழைய உரையும்
ஐந்து திணைகளுக்கும் 100 அகப்பாடல்களை கொண்ட நுால். குறைந்த அடிகளை கொண்ட பாவால் அமைந்தது. மூன்றடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும் உடைய பாடல்களால் அமைந்தது. முதல் 100 பாடல்கள், ‘மருதம்’ ஓரம்போகியாரால் பாடப்பட்டது. இரண்டாம் 100, ‘நெய்தல்’ அம்மூவனாரால் பாடப்பட்டது. மூன்றாம் 100, ‘குறிஞ்சி’ கபிலராலும்; நான்காம் 100, ‘பாலை’ ஓதலாந்தையாராலும்; ஐந்தாம் 100, ‘முல்லை’ பேயனாராலும் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நுாறும் பத்து பத்தாக தொகுக்கப்பட்ட நுண்மை குறிப்பிடத்தக்கது. சொற்சுவை, பொருட்சுவை உடையது. இயற்கை அழகை படம் பிடித்துக் காட்டி, முதல், கரு, உரு என முப்பொருளையும் விளக்கும் நுால். – சிவா




