/ புத்தக மதிப்புரை / அலமேலு கோலம் போடுகிறாள்
அலமேலு கோலம் போடுகிறாள்
பத்திரிகைகளில் 25 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். இன்றைக்கும் பொருந்தும் வகையில் இயல்பான நடையில் உள்ளன. தொகுப்பில் 19 கதைகள் உள்ளன. இவற்றில் இரண்டு மட்டும் தான் சமீபத்தில் எழுதப்பட்டவை. அவை, வெளிநாட்டில் தற்போது உள்ள நடைமுறை சூழலை விவரிக்கும் வகையில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளன. குடும்பம் என்றால் என்ன; உதவி செய்வது என்றால் என்ன என நல்ல படிப்பினையை தருகின்றன. தெலுங்கானா தலைநகர சூழல்களை தெளிவாக விவரிக்கிறது. அறிவு தோற்க வேண்டும்; அன்பு ஜெயிக்க வேண்டும் என்பதை உரைக்கிறது. வேப்ப மரம், மா மரத்தை வர்ணித்து, அந்த சூழலுக்கே இழுத்து செல்கிறது. மரங்களை நேசிப்பது அழுத்தமாக பதிவாகியுள்ளது. அவசியம் படிக்க வேண்டிய நுால். – சீத்தலைச்சாத்தன்




