/ கதைகள் / அம்மா வீட்டுக்குப் போகிறேன்...

₹ 70

சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தக தலைப்பாக அமைந்த கதையில் மருமகள் வந்த பின்னும் மாமியார், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அம்மா வீட்டுக்கு போவதை கூறுகிறது. ஒரு கதை, கரடி கராத்தே என்ற மையப்புள்ளியில் சுழல்கிறது. எல்லா கதைகளின் ஊடாகவும் மெல்லிய நகைச்சுவை தவழ்கிறது. பெரும்பாலானவை திருப்பத்துடன் நிறைவடைகின்றன. ஒவ்வொரு கதையும் புதிய கருத்தை கூறி, சிந்தனையை துாண்டும் வகையில் அமைந்துள்ளது. எதை எடுத்தாலும் வேகம் உடனே தொற்றிக் கொள்கிறது. தேவையற்ற வர்ணனை எதுவும் இல்லாமல் நகைச்சுவை கலந்த வாக்கியங்களில் அமைந்துள்ளன. ஒரு மணி நேரத்தில் படித்து முடிக்கக்கூடிய சிறுகதை தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன்


சமீபத்திய செய்தி