/ தீபாவளி மலர் / அம்மன் தரிசனம் தீபாவளி மலர் 2025
அம்மன் தரிசனம் தீபாவளி மலர் 2025
சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள் அருளுரையுடன் ஜொலிக்கிறது அம்மன் தரிசனம் தீபாவளி மலர். சிருங்கேரி தோரண கணபதி மற்றும் ஸ்ரீசாரதாம்பாள், ஆதிசங்கரர் உள்ளிட்ட மகான்களின் வண்ணப்படங்களும் அலங்கரிக்கின்றன. மலரில் 30 ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மகான்களின் அருளுரையுடன் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்து கூறப்பட்டுள்ளது. பாரதத்தில் சிறப்பு பெற்ற கலைகளை காக்க வேண்டியதன் அவசியம், அதர்மங்களை தவிர்க்கும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. தீபாவளியின் முக்கியத்துவம், அதை கொண்டாட வேண்டிய அவசியம் குறித்து தகவல்கள் நிரம்பியுள்ளன. தானம் செய்வதன் அவசியம், சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதை தெரிந்து கொள்வது என பல விளக்கங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை குறித்து வியப்பான செய்திகளுடன் மலர்ந்துள்ளது அம்மன் தரிசனம். – சாமி