/ கதைகள் / அன்பரசனின் ஊமை உள்ளம்

₹ 140

சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். எளிய எழுத்து நடையில் அமைந்து உள்ளது. எடுத்துக் கொண்ட கருத்தை ஆளுகிற விதம் அருமையாக உள்ளது. இதில் உள்ள வாரிசு அரசியல் என்ற குறுநாவல், இன்றைய அரசியல் சூழ்நிலையை நையாண்டியாக எடுத்துக் காட்டுகிறது.ஆளும் வர்க்கமும், அதிகாரிகள் வர்க்கமும் எப்படி எப்படி செயல்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறது. திட்டங்கள் வெற்றியடையும் போது, புகைப்படம் வெளிச்சம் ஆளும் வர்க்கத்திற்கு கிடைக்கிறது. திட்டங்கள் தோற்றால், அதிகாரிகள் தண்ணியில்லா காட்டுக்கு மாற்றப்படுகின்றனர்.பதவியில் இருக்க வேண்டும் என்றால் சத்தியம், தர்மம், நேர்மை எல்லாம் எடுபடாது. அரசியல் என்பதற்கு ஒரே விளக்கமாக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என சம்மட்டியால் அடிக்கிறார். பொழுது போக மட்டுமல்ல, இன்றைய அரசியலின் உள்குத்துகளை புரிந்து கொள்ளவும் படிக்கலாம்.– சீத்தலைச் சாத்தன்


புதிய வீடியோ